Skip to main content

Posts

Showing posts from March, 2022
  வாலிபனுக்கு வழிசொல்   வாலிபனே உன் உலகினிலே போதை தரும் பொழுதினிலே போனதையே எண்ணீ ஏங்காதே   காலங்கள் மாறும் கணிதங்கள் மாறும் தையொன்று பிறந்தால் வழியொன்று பிறக்கும்   இழந்ததை எண்ணீ எண்ணீ ஏங்காதே   வாலிபனே ............   முயற்சியை தொடரு பயிற்சியைத் தொடரு திறமைகள் வளர்ந்தால் வழியொன்று தெரியும்   ஒளிரும் வைரம் இலகுவில் கிடைக்காதே ......     வாலிபனே .....     காதலித்த பெண்ணொருத்தி கைவிட்டு போனால் காத்திருந்த பரீதசையில் தேறாமல் போனால் சேர்த்துவைத்த பொருளையெல்லாம் கோள் கொண்டு போனால்   கவலையில்லை தடுமாற்றமில்லை கலக்கமில்லை தடு மாற்றமில்லை   போதை நீக்க போதைப்பொருள் தேவையில்லை போதையிலே இன்பம் ஒன்றும் தெரிவதில்லை வாழ்வின் என்றும் இன்ப துன்பம் வருதுண்டு துன்பமதை துரத்திடவே முயற்சி யுண்டு   பாதையொன்று தெளிவாக தெரிந்து விட்டால் பயணமொன்றும் கடினமாக   தெரிவதில்லை   கலக்கமில்லை தடுமாற்றமில்லை கவலையில்லை தடுமாற்றமில்லை.
  மறை அர்த்தங்கள்   ஒன்றை இழந்துவிட்டாய் என்றால் அதைவிடவும் சிறந்ததை நீ அடைவாய் என்பது அர்த்தம்   ஒன்றை முயற்சித்தும் அடையவில்லை என்றால் அதைவிடவும் சிறந்ததை நீ அடையலாம் என்பது அர்த்தம்   ஒன்றை படிக்க முடியவில்லை என்றால் அதைவிடவும் சிறந்ததை உன்னால் படிக்க முடியும் என்பது அர்த்தம்   ஒன்றை செய்ய முடியவில்லை என்றால் அதை விடவும் சிறந்ததை உன்னால் செய்ய முடியும் என்பது அர்த்தம்   ஒன்று உன்னிடம் இல்லை என உணர்ந்தால் அதைவிடவும் சிறந்தது உன்னில் உள்ளது என்பது அர்த்தம்   ஒருவனில் நீ ஒரு குறையைக் கண்டால் அவனிடம் பல நிறைகள் உள்ளன என்பது அர்த்தம்     விறல் நுனிகூட வித்தியாசமாக இருந்தாலும் எல்லா மனிதர்களும் சமமே   என்பது அர்த்தம்   மனிதன் தனி இனமாக இருந்தாலும் ஒவ்வொருவரும் தனித்துவமானவர் என்பது அர்த்தம்     புலி ஒரு கணம் பதுங்கி இருந்தால் மறுகணம் பாயலாம் என்பது அர்த்தம்              கம்பளிப்போச்சு சற்று ஓய்வாகத் தூங்கினால் பட்டாம் பூச்சியாக...
  சிறப்புகள் சில   கலைகளில் சிறந்த கலை எருமைகளுடனும் இணங்கிவாழத் தெரிந்த கலை   பொறுமைகளில் சிறந்த பொறுமை நாவை கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடிய பொறுமை   பழக்கங்களில் சிறந்த பழக்கம் அதிகாலையில் எழுந்துகொள்ளும் பழக்கம்   அறிவுகளில் சிறந்த அறிவு படைத்தவனை அறியத்தரும் அறிவு   படித்ததில் சிறந்த பாடம் உன் வாழ்க்கை கற்றுத்தந்த பாடம்   பண்புகளில் சிறந்த பண்பு யாவரையும் சமமாய் மதிக்கும் பண்பு   திறமைகளில் சிறந்த திறமை பகைவனை நண்பனாக மாற்றிக் கொள்ளும் திறமை   ஞானங்களில் சிறந்த ஞானம் பிறர் வாதிக்க விட்டுக்கொடுக்கச் சொல்லும் ஞானம்   கொடைகளில் சிறந்த கொடை தொடர்ந்தும் கொடுக்கக்கூடிய கொடை   மதங்களில் சிறந்த மதம் பிறருக்கு உதவச் சொல்லும் மதம்   நாட்களிலே நல்ல நாள் உன்னால் பிறருக்கு நலவு நிகழ்ந்த நாள்     மந்திரங்களில் சிறந்த மந்திரம் உன் உளக்கவலையை போக்கும் மந்திரம்     உணவுகளில் சிறந்த உணவு உள்ளன்புடன் ஒருவர் பரிமாறும் உணவு   நூல்களில் சிறந...