Skip to main content

 வாலிபனுக்கு வழிசொல்

 

வாலிபனே உன் உலகினிலே

போதை தரும் பொழுதினிலே

போனதையே எண்ணீ ஏங்காதே

 

காலங்கள் மாறும்

கணிதங்கள் மாறும்

தையொன்று பிறந்தால்

வழியொன்று பிறக்கும்

 

இழந்ததை எண்ணீ எண்ணீ ஏங்காதே

 

வாலிபனே ............

 

முயற்சியை தொடரு

பயிற்சியைத் தொடரு

திறமைகள் வளர்ந்தால்

வழியொன்று தெரியும்

 

ஒளிரும் வைரம் இலகுவில் கிடைக்காதே ......

 

 

வாலிபனே .....

 

 

காதலித்த பெண்ணொருத்தி

கைவிட்டு போனால்

காத்திருந்த பரீதசையில் தேறாமல் போனால்

சேர்த்துவைத்த பொருளையெல்லாம்

கோள் கொண்டு போனால்

 

கவலையில்லை தடுமாற்றமில்லை

கலக்கமில்லை தடு மாற்றமில்லை

 

போதை நீக்க போதைப்பொருள் தேவையில்லை

போதையிலே இன்பம் ஒன்றும் தெரிவதில்லை

வாழ்வின் என்றும் இன்ப துன்பம் வருதுண்டு

துன்பமதை துரத்திடவே முயற்சி யுண்டு  


பாதையொன்று தெளிவாக தெரிந்து விட்டால்

பயணமொன்றும் கடினமாக  தெரிவதில்லை

 

கலக்கமில்லை தடுமாற்றமில்லை

கவலையில்லை தடுமாற்றமில்லை.

Comments