மறை அர்த்தங்கள்
ஒன்றை இழந்துவிட்டாய்
என்றால்
அதைவிடவும் சிறந்ததை
நீ அடைவாய் என்பது அர்த்தம்
ஒன்றை முயற்சித்தும் அடையவில்லை என்றால்
அதைவிடவும் சிறந்ததை
நீ அடையலாம் என்பது அர்த்தம்
ஒன்றை படிக்க முடியவில்லை
என்றால்
அதைவிடவும் சிறந்ததை
உன்னால் படிக்க முடியும் என்பது அர்த்தம்
ஒன்றை செய்ய முடியவில்லை
என்றால்
அதை விடவும் சிறந்ததை
உன்னால் செய்ய முடியும் என்பது அர்த்தம்
ஒன்று உன்னிடம் இல்லை
என உணர்ந்தால்
அதைவிடவும் சிறந்தது
உன்னில் உள்ளது என்பது அர்த்தம்
ஒருவனில் நீ ஒரு குறையைக்
கண்டால்
அவனிடம் பல நிறைகள்
உள்ளன என்பது அர்த்தம்
விறல் நுனிகூட வித்தியாசமாக
இருந்தாலும்
எல்லா மனிதர்களும்
சமமே என்பது அர்த்தம்
மனிதன் தனி இனமாக
இருந்தாலும்
ஒவ்வொருவரும் தனித்துவமானவர்
என்பது அர்த்தம்
புலி ஒரு கணம் பதுங்கி
இருந்தால்
மறுகணம் பாயலாம் என்பது அர்த்தம்
கம்பளிப்போச்சு சற்று
ஓய்வாகத் தூங்கினால்
பட்டாம் பூச்சியாக
பறக்கப்போகிறது என்பது அர்த்தம்
கடல் ஒரு கணம் வற்றிப்போனால்
சுனாமியாக
எழுந்து வரலாம் என்பது அர்த்தம்.
கரி கடுமையாக அழுத்தப்படுகிறது
என்றால்
வைரமாக என்றும் மிளிறலாம்
என்பது அர்த்தம்
சூரியன் உச்சிக்கு
வந்து கரிக்கிறது என்றால்
சாய்ந்து நிழல் வரப்போகிறது
எனபது அர்த்தம்
நினைத்தவாறு ஒன்று
நடக்கவில்லை என்றால்
நினைத்ததை நடத்துபவன் ஒருவன் உள்ளான் என்பது அர்த்தம்
Comments
Post a Comment