Skip to main content

 

சிறப்புகள் சில

 

கலைகளில் சிறந்த கலை

எருமைகளுடனும் இணங்கிவாழத் தெரிந்த கலை

 

பொறுமைகளில் சிறந்த பொறுமை

நாவை கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடிய பொறுமை

 

பழக்கங்களில் சிறந்த பழக்கம்

அதிகாலையில் எழுந்துகொள்ளும் பழக்கம்

 

அறிவுகளில் சிறந்த அறிவு

படைத்தவனை அறியத்தரும் அறிவு

 

படித்ததில் சிறந்த பாடம்

உன் வாழ்க்கை கற்றுத்தந்த பாடம்

 

பண்புகளில் சிறந்த பண்பு

யாவரையும் சமமாய் மதிக்கும் பண்பு

 

திறமைகளில் சிறந்த திறமை

பகைவனை நண்பனாக மாற்றிக் கொள்ளும் திறமை

 

ஞானங்களில் சிறந்த ஞானம்

பிறர் வாதிக்க விட்டுக்கொடுக்கச் சொல்லும் ஞானம்

 

கொடைகளில் சிறந்த கொடை

தொடர்ந்தும் கொடுக்கக்கூடிய கொடை

 

மதங்களில் சிறந்த மதம்

பிறருக்கு உதவச் சொல்லும் மதம்

 

நாட்களிலே நல்ல நாள்

உன்னால் பிறருக்கு நலவு நிகழ்ந்த நாள் 

 

மந்திரங்களில் சிறந்த மந்திரம்

உன் உளக்கவலையை போக்கும் மந்திரம் 

 

உணவுகளில் சிறந்த உணவு

உள்ளன்புடன் ஒருவர் பரிமாறும் உணவு

 

நூல்களில் சிறந்த நூல்

பிற நூல்களை கற்கச் சொல்லும் நூல் 

 

சக்திகளில் சிறந்த சக்தி

ஒற்றுமையால் கிடைக்கும் சக்தி

 

குணங்களில் சிறந்த குணம்

எப்பொழுதும் பணிவாக நடந்துகொள்ளும் குணம்

 

 

 

தெரிந்து கொள்ள சில வரிகள்,,,,,,,,,,,,,,,,,,,,,,,

முதலாம் அடி  - அல்குர்'ஆன் 41:34 க்கு இசைவானது

இரண்டாம்   - நபி மொழிக்கு இசைவானது - புஹாரி 6114, முஸ்லிம் 107

மூன்றாம்  - அதிகாலை தொழுகையுடன் தொடர்பு பட்டது 

நான்காம்  - அல்குர்'ஆனின் 35:28 வசனத்துக்கு இசைவானது

ஐந்தாம் - பலரதும் பொது அனுபவம் 

ஆறாம்  - அல்குர்'ஆன் 49:13 வசனத்துக்கு இசைவானது

ஏழாம்  - பல மதங்களின் போதனைகளையும் உள்ளடக்கியது

எட்டாம்  - அல்குர்'ஆன் 25:63 வசனத்துக்கு இசைவானது

ஒன்பதாம்  - அல்குர்'ஆனின் 17:29 நபி மொழி -புஹாரி 6465, முஸ்லிம் 783 க்கு இசைவானது

பத்தாம்  - அல்குர்'ஆன் 41:34 க்கு இசைவானது

பனிரெண்டாம் - 2:156

பதின் மூன்றாம் - இம்மாம் ஷாபிஈ அவர்களின் ஒரு கூற்று

பதினான்காம் - அல்குர்'ஆன் 96:1-4, 16:43, உட்பட இன்னும் பல வசனங்கள்

பதினைந்தாம் - திருக்குர்'ஆன் 3:103

Comments